×

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் பாறை, சுனையில் பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

*மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் பாறை, சுனையில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர்.திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் ஆந்திர போலீசார் உடன் ஒன்றிணைந்து சாராய ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இருக்கக் கூடாது என சுமார் 43 குழுக்கள் அமைத்து நாள்தோறும் அதிரடி சாராய வேட்டை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டு, இதுவரை 18 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை அடுத்த புங்கம்பட்டு நாடு அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள சுனை அருகே சென்று பார்த்தபோது 10 அடி ஆழத்தில் உள்ள பாறையில் இடுக்கில் சாராயம் ஊறல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் சுமார் 1000 லிட்டர் ஊறலை கீேழ ஊற்றி அழித்தனர். மேலும் இதுகுறித்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கூறுகையில், ‘தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை, காட்டுப் பகுதியில், சமூக விரோத கும்பல்கள் சாராயம் காய்ச்சி வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார சுற்றி வளைத்து காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது புது ஒரு யுக்தியாக அங்கு பாறையின் இடுக்கில் உள்ள சுனையில் சாராய ஊறல்களை போட்டு காய்ச்சுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதையும் போலீசார் கண்டுபிடித்து தற்போது அழித்து வருகின்றனர்’ என கூறினார்.

The post திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் பாறை, சுனையில் பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Javvadu Hill ,Tirupathur ,Liquor Prohibition Enforcement Division ,Tirupattur ,Tiruppattur ,
× RELATED தகவல் பகிர 772 வாட்ஸ் அப் குழுக்கள்...