×

கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மூடுபனி கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

வால்பாறை : வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடும் குளிர் நிலவுகிறது.வால்பாறை பகுதியில் அட்டகட்டி, வாட்டர்பால்ஸ்,கவர்கல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசுகிறது. எனவே கடுங்குளிர் நிலவுகிறது. தொடர்ந்து மூடுபனியும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் மிக உயரமான மலைப்பகுதியாக உள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியில்,தொடர் மூடுபனி நிலவுவதால் தேயிலை தோட்டங்களில் மக்கள் பணி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எதிரே நிற்கும் நபர் கூட தெரியாத அளவிற்கு காலநிலை உள்ளது. எனவே வீடுகளிலும்,பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் தகர டின்களில் தீ போட்டு குளிர் காய்ந்து வருகின்றனா். அட்டகட்டி மற்றும் வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் அதிக அளவு காற்று வீசுவதால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணைக்கு 1775 கன அடி நீர் வரத்து உள்ளது.அணை நீர்மட்டம் 95 அடியாகவும் உயர்ந்துள்ளது அணையில் 2433 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

The post கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மூடுபனி கடும் குளிரால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kharkal Estate ,WALBARA ,Awarkal Estate ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வால்பாறையில்...