×

எவ்வளவு அழகு!!: பிரேசிலில் நயாகரா அருவி போல் மாறிய இகுவாஸு அருவி..குவியும் சுற்றுலாப் பயணிகள்..!!

பிரேசில்: தெற்கு பிரேசிலில் பிரசித்திபெற்ற இகுவாஸு அருவி அமெரிக்காவின் நயாகரா அருவி போன்று மாறியுள்ளது. பிரேசிலின் ஃபோடோ இகுவாஸு நகரில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இகுவாஸு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இகுவாஸு அருவியில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இகுவாஸு அருவியில் 6 மடங்கு அதிகம் வெள்ளம் கொட்டுகிறது.

நயாகரா அருவி போன்று மாறியுள்ளதால் அதை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த அருவியில் வினாடிக்கு 15 லட்சம் கனஅடி வெள்ளம் பாயும் நிலையில் தற்போது அது 25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு தொடர்வதால் இகுவாஸு ஆறு பாயும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post எவ்வளவு அழகு!!: பிரேசிலில் நயாகரா அருவி போல் மாறிய இகுவாஸு அருவி..குவியும் சுற்றுலாப் பயணிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Iguazu Fall ,Niagara Fall ,Brazil ,southern Brazil ,United States ,Foto Iguazu, Brazil ,
× RELATED பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை : பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு!!