×

எரிவாயு குறைதீர் கூட்டம்

 

ராமநாதபுரம், ஜூலை 21: ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் 24.7.2023 அன்று நடக்கிறது. பிற்பகல் 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

The post எரிவாயு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Rameswaram ,Geezkarai ,Rajasinghamangalam ,Thiruvadanai ,Paramakudi ,Kamudi ,Cuddaly ,Mudugulathur ,Dinakaran ,
× RELATED ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான...