×

மண்டல பூஜை யாகம்

 

மானாமதுரை, ஜூலை 21: மானாமதுரை ஒன்றியம், எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாளான நிலையில் நேற்று முன்தினம் கோயிலில் மண்டலாபிஷேக விழா துவங்கியது.

கணபதி ஹோமத்திற்குப்பின் 48ம் நாள் மண்டல பூஜை யாகம் சிவாச்சாரியர்களால் வளர்க்கப்பட்டது.பூர்ணாகுதிக்கு பின் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post மண்டல பூஜை யாகம் appeared first on Dinakaran.

Tags : Mandal Pooja Yagam ,Manamadurai ,S.Karisalkulam ,Mandal Puja Yagam ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது