×

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி

காலே: இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலே சர்வதேச அரங்கில் ஜூலை 16ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 312ரன்னிலும், 2வது இன்னிங்சில் 279ரன்னிலும் ஆட்டமிழந்தது. இடையில் விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 416ரன் குவித்தது. அதனால் 2வது இன்னிங்சில் 131ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 4வது நாளான நேற்று முன்தினம் பாக் களம் கண்டது. அந்த அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 15ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 48ரன் எடுத்திருந்தது. அதனையடுத்து பாக் கடைசி நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. களத்தில் இருந்த கேப்டன் பாபர் அஸம், இமாம் உல் ஹக் 4வது விக்கெட்டுக்கு 41ரன் சேர்த்தனர். பாபர் அஸம் 24, சவுத் ஷக்கீல் 6பவுண்டரிகளுடன் 36பந்தில் 30, சர்பரஸ்அகமத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

வெற்றிக்கு 4 ரன் தேவை என்ற நிலையில் அடுத்து வந்த அஹா சல்மான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதனால் பாகிஸ்தான் தேநீர் இடைவேளைக்கு முன்பே 32.5ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 133ரன்னை எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அரைசதம் விளாசிய இமாம் உல் ஹக் 50ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 4விக்கெட் எடுத்தார்.
இரட்டைச் சதம் விளாசிய பாக் வீரர் சவுத் ஷக்கீல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாக் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது. இந்த அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ஜூலை 24ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது.

The post இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,Pakistan ,Galle ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...