×

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 16 பேர் பலி

மும்பை: தொடர் மழை காரணமாக ராய்கட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் பால்கர், தானே, ராய்கட், ரத்னகிரி, புனே, சதாரா ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று ராய்கட், பால்கர், தானே, புனே மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதில் ராய்கட்டில் நேற்று முன்தினத்தில் இருந்து கனத்த மழை பெய்து வருகிறது.பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காலாப்பூர் தாலுகா இர்ஸ்ஹால்வாடியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு பகுதியில் 103 பேர் வசித்துள்ளனர். சிலர் வேலைக்கு சென்றுவிட்டனர். நிலச்சரிவு ஏற்பட்டு சரிந்த மண் 15 முதல் 20 அடிக்கு குவிந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு வாகனங்கள், கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று காலை பார்வையிட்டார்.

The post மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 16 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Raigad ,Mumbai ,Raicut ,Balkar ,Thane ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...