×

மறைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு சேமநலநிதி: நீதிபதி வழங்கினார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு, ரூ.1 லட்சம் சேமநலநிதியை நீதிபதி ஜி.செந்தமிழ்செல்வன் வழங்கினார். ஊத்துக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா மூலம், சேமநல நிதியான ரூ.1 லட்சத்திற்கான (தலா ரூ.50 ஆயிரம் வீதம்) காசோலையை மறைந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், வழங்கறிஞர் சங்கத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

காப்பாளர் தீனதயாளன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.செந்தமிழ்செல்வன் கலந்துகொண்டு, மறைந்த வழக்கறிஞர்களான சத்யாவின், மனைவி உமாமகேஸ்வரியிடமும், குமாருடைய மனைவி அம்பிகாவிடமும் தலா ரூ.50 ஆயிரம் வீதம், 2 குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எம்.சாமி பார்த்திபன், ராஜசேகரன், வேல்முருகன், கன்னியப்பன், ரமேஷ், குமார், வாசுதேவன், சாந்தகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மறைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு சேமநலநிதி: நீதிபதி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Judge ,G. Senthamilselvan ,Oothukottai Court ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டையிலிருந்து...