×

சொர்ணாம்பிகை உடனுறை திருமூல நாதர் சாமி கோயிலின் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு

புழல்: சொர்ணாம்பிகை உடனுறை திருமூல நாதர் சாமி கோயிலின், அறங்காவலர் குழுவினர் நேற்று முன்தினம் மாலை பதவியேற்றனர். சென்னை புழல் காந்தி பிரதான சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை திருமூலநாதர் சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அறங்காவலர்களாக 24வது வார்டு திமுக அவைத்தலைவர் ரவி, சென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன், லட்சுமி நீதிராஜன் ஆகிய மூன்று பேர் இந்து சமய அறநிலையத்துறையினரால் நியமிக்கப்பட்டனர்.

நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் நேற்று முன்தினம் மாலை கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் கோயில் நிர்வாக செயலாளர் திருகுமரன், ஆய்வாளர் யுவராஜ் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர், ஒருமனதாக ரவி அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தொமுச மாநில பேரவை செயலாளர் பொன் ராம், மாதவரம் தெற்கு பகுதி திமுக செயலாளர் துக்காராம், புழல் 24வது வார்டு திமுக செயலாளர் சுந்தரேசன் மற்றும் புழல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆன்மிகவாதிகள், நல சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பு ஏற்று கொண்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பின்னர், அறங்காவலர்கள் அறைகள் திறந்து வைக்கப்பட்டது.

The post சொர்ணாம்பிகை உடனுறை திருமூல நாதர் சாமி கோயிலின் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirumula Nadar Sami Temple ,Sornambikai Udanurai ,Puzhal ,Sornambikai Udanurai Tirumula Nadar Sami Temple ,Chennai ,Puzhal… ,Sornambikai Udanurai Tirumula Nadhar Sami Temple ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...