×

சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் கொத்தடிமைகளாக இருந்த 12 வடமாநில சிறுவர்கள் மீட்பு

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் கொத்தடிமைகளாக இருந்த 12 வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சென்னை கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட குழந்தை தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சவுகார்பேட்டை ரெட்டி ராமன் தெரு பகுதியில் உள்ள தங்கப்பட்டறையில் வடமாநில சிறுவர்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட குழந்தை தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் மேற்கண்ட தங்கப்பட்டறையில் சோதனை நடத்தினர். அப்போது, அப்போது, மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 சிறுவர்கள் தங்க செயின், மோதிரம் செய்யும் பணியில் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது. மேலும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் கொடுத்து சவுகார்பேட்டை அழைத்து வந்து 14 மணி நேரம் வேலை செய்ய வைத்ததும், சிறுவர்கள் தங்கியிருந்த அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களை மருத்துவ பரிசோதனை செய்து ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பெற்றோர் வந்ததும் அவர்களிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சவுகார்பேட்டை நகைப்பட்டறையில் கொத்தடிமைகளாக இருந்த 12 வடமாநில சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : North State ,Saukarpet ,Thandaiyarpet ,State ,Dinakaran ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...