×

உம்மன் சாண்டியின் விருப்பத்தின் படி அரசு மரியாதையின்றி நல்லடக்கம்: புதுப்பள்ளி தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறும்

கேரளா: மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடல் அவரது இறுதி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி நல்லடக்கம் செய்யப்படுகிறது. 79 வயதான கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல்நல குறைவால் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். எதிர்க்கட்சி கூட்டத்திற்காக பெங்களூரு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து உம்மன் சாண்டி உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அவரது புதுப்பள்ளி வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சாலை மார்க்கமாக கோட்டயத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டிற்கு சாண்டியின் உடல் அலங்கரிக்கப்பட்ட அரசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரம் முதல் கோட்டையும் வரை சாலையின் இரு புறமும் ஆயிரக்கணக்கான மக்கள் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் கடலுக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தற்போது கோட்டயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. உம்மன்சாண்டியின் கடைசி விருப்பத்தின்படி அரசு மரியாதையையின்றி அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கு எந்த வித அரசு மரியாதையுமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற மறைந்த உம்மன்சாண்டியின் கடைசி விருப்பம் குறித்து அவரது குடும்பத்தினர் மணிலா அரசுக்கு தெரிவித்தனர். அதனை கேரள அரசும் ஒப்புக்கொண்டது. இறுதி சடங்குகளுக்கு பின்பு உம்மன்சாண்டியின் உடல் மாலை 3.30 மணியளவில் புதுப்பள்ளியில் உள்ள புனித ஜார்ஜ் ஆர்த்தடஸ் தேவாலய கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

The post உம்மன் சாண்டியின் விருப்பத்தின் படி அரசு மரியாதையின்றி நல்லடக்கம்: புதுப்பள்ளி தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Ooman Sandy ,Pudupalli Church ,Kerala ,Chief Minister ,Oomman Chandy ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...