×

மழை காரணமாக நிரம்பிய கேர்ன்ஹில் தடுப்பணை

 

ஊட்டி, ஜூலை20: ஊட்டி கேர்ன்ஹில் பகுதியில் உள்ள தடுப்பணை மழை காரணமாக நிரம்பியுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி அருகே கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை,காட்டுமாடு,மான்கள்பல்வேறு வகை பறவையினங்கள் உள்ளன. இங்கு வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு நடுவே நடைபயணம் மேற்கொண்டு மகிழ்கின்றனர்.

இப்பகுதியின் நுழைவு வாயில் அருகே வனத்தை ஒட்டி சிறு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை மழை பெய்யும் சமயங்களில் நிரம்பிவிடும். இதனை வனவிலங்குகள் அருந்தி தாகம் தீர்த்து கொள்வது வாடிக்கை. இந்நிலையில் கடந்த மே மாத வரை இந்த தடுப்பணையில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.தொடர்ந்து கடந்த மாதம் மற்றும் இம்மாத துவக்கத்தில் இருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த தடுப்பணையில் நீர்மட்டம் முழுமையாக நிரம்பியுள்ளது.

இதனால் காட்டுமாடு, மான்கள் மற்றும் பிற வனவிலங்குகள் தண்ணீர் அருந்தி செல்கின்றன. காட்டுமாடுகள் தண்ணீர் அருந்தி செல்வதை காண முடிகிறது. இதனிடையே இந்த நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் வளர்ந்துள்ள அந்நிய களை தாவரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post மழை காரணமாக நிரம்பிய கேர்ன்ஹில் தடுப்பணை appeared first on Dinakaran.

Tags : Cairnhill barrage ,Ooty ,Cairnhill ,Dinakaran ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்