×

மலையாண்டிபட்டணத்தில் கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம்

 

உடுமலை, ஜூலை 20: கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வலியுறுத்தி, மலையாண்டி பட்டணம் விநாயகர் கோயில் முன்பு நேற்று கைத்தறி நெசவாளர் குடும்பத்தினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.கைத்தறியின் 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது, கைத்தறி நெசவாளர்கள் நலன் காப்பிட்டு திட்ட மருத்துவ அட்டையை மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

சங்க நிர்வாகி மல்லையசாமி கூறுகையில், “பாரம்பரியமிக்க கைத்தறி நெசவு தொழிலில் மலையாண்டிபட்டணத்தில் 400 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறோம். மூலப்பொருட்களின் விலை நிலையாக இல்லாத காரணத்தால், கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் கட்டுப்பாடின்றி மிக அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். இதனால் எங்களின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு, நெசவாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.உண்ணாவிரத் போராட்டத்தில் நெசவாளர் குடும்பத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post மலையாண்டிபட்டணத்தில் கைத்தறி நெசவாளர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Malayandipatnam ,Udumalai ,Malayandi Pattanam Vinayagar temple ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு