×

கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

பெரியகுளம், ஜூலை 20: பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 600 ஆண்டு பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 10ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடந்த 9 நாட்களாக சுவாமி அலங்கரிக்கப்பட்டு தினமும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அலகரிக்கப்பட்ட சிம்ம வாகனம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவிழாவின் 10ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகுகுத்தி, தீச்சட்டி எடுத்து, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவை ஒட்டி பெரியகுளம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் பெரியகுளம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கீதா தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டனர்.

The post கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Gaumariamman ,Periyakulam ,Koumaryamman ,Hindu Religious Foundation ,Temple ,Eye Festival of Thechati ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில்...