×

பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருமலை: ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட6 பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடி இளைஞன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் மறப்பதற்குள் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஓங்கோலை சேர்ந்தவர்கள் மோட்டா நவீன் மற்றும் அஞ்சி. இவர்களில் நவீன் பழங்குடியினர் இனத்தை ேசர்ந்தவர். இவர்கள் இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் பெண் ஒருவருடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்சி, நவீனை அப்பகுதியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை பின்புறம் அழைத்து சென்று மது ஊற்றிக்கொடுத்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீனை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், நவீனின் வாயில் சிறுநீர் கழித்து உள்ளனர். இந்த கொடூரத்தை உடனிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Andhra state ,Ongole ,
× RELATED காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில்...