×

மீண்டும் தீவிரமடைகிறது பருவ மழை காஷ்மீரில் 8 பேர் பரிதாப பலி: மகாராஷ்டிரா, உத்தரகாண்ட்டில் கனமழை

ஜம்மு: மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. காஷ்மீரில் 8 பேர் பலியாகி விட்டனர். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. கதுவா மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகி விட்டனர். சுர்ஜான் பகுதியில் வீடு இடிந்து மேலும் 3 பேர் சிக்கித்தவிப்பது தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஜம்மு முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தோடா, கிஷ்திவார் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறுகளிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தானே, பால்கர் பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கிறது.

தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் அரசு அலுவலகங்கள் முன்கூட்டியே மூடல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் மும்பை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் ரயில், பஸ் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகலுக்கு மேல் அனைத்து அரசு அலுவலகங்களையும் முன்கூட்டியே மூட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார். குஜராத்: குஜராத் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதி முழுவதும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. மங்ரோல் தாலுகாவில் நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. அங்கு 8 மணி நேரத்தில் 290 மிமீ மழை பெய்துள்ளது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார்க் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக இந்தியா-சீனா எல்லையில் உள்ள தற்காலிக இரும்பு பாலம் அடித்து செல்லப்பட்டது.

The post மீண்டும் தீவிரமடைகிறது பருவ மழை காஷ்மீரில் 8 பேர் பரிதாப பலி: மகாராஷ்டிரா, உத்தரகாண்ட்டில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Maharashtra ,Uttarkandt ,Jammu ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!