×

ரயில்வே அதிரடி அறிமுகம் பொதுப்பெட்டி பயணிகளுக்கு மலிவு விலை உணவு, குடிநீர்: ரூ.20, ரூ.50ல் 2 வகை சாப்பாடு

புதுடெல்லி: பொதுப்பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மலிவு விலை உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பொதுப்பெட்டியில் பயணிக்கும் ரயில்வே பயணிகளுக்கு தரமான உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 2 வகை கட்டணத்தில் உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. வகை 1 உணவுக்கு கட்டணம் ரூ.20 ஆகும். இதில் 7 பூரிகள், உலர் பருப்பு கூட்டு, ஊறுகாய் இடம்பெறும். வகை 2 உணவுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். இவை தவிர தென் இந்திய உணவு வகைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அரிசி சாதம், சிவப்பு காராமணி உணவு, மசால்பூரி, கிச்சடி, பட்டுரே, பாவ்-பஜ்ஜி, மசாலா தோசை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சார்பில் பொதுப்பெட்டிகள் வந்து நிற்கும் நடைமேடை பகுதியில் இதற்கான உணவு கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் மலிவு விலையில் 200 மிலி குடிநீர் பாட்டில்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உணவுகள் ஐஆர்சிடிசியின் உணவு மையங்கள் மூலம் தயாரித்து பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு முக்கியமாக இந்த கவுண்டர்கள் ெபாதுப்பெட்டிகள், அதாவது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் வந்து நிற்கும் இடத்தில் அமைய வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பிளாட்பாரங்களை சீரமைக்க வேண்டும். இந்த உணவு கவுண்டர்கள் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் சோதனை அடிப்படையில் 6 மாதம் செய்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவுப்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் 51 நிலையங்களில் இந்த உணவு கவுண்டர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மேலும் 13 ரயில் நிலையங்களில் உணவுக்கவுண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்வே அதிரடி அறிமுகம் பொதுப்பெட்டி பயணிகளுக்கு மலிவு விலை உணவு, குடிநீர்: ரூ.20, ரூ.50ல் 2 வகை சாப்பாடு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...