×

தென்காசி அருகே திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.7.50 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.7.50 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கபட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை ரூ.4,803.38 கோடி மதிப்பீட்டிலான 5,292.17 ஏக்கர் நிலங்களும், 1,279 கிரவுண்ட் மனை மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.7.50 கோடி மதிப்பீட்டிலான நன்செய் நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக புளியரை கிராமத்தில் 143.24 ஏக்கர் நன்செய் நிலம் புளியரை கூட்டுறவு பண்ணை சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலத்திற்கு புளியரை கூட்டுறவு சங்கத்தினர் சுமார் ரூ.3 கோடி குத்தகை பாக்கி வைத்திருந்ததால், 2018 ஆம் ஆண்டு வருவாய் நீதிமன்றத்தில் உரிய கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்ட உத்தரவுப்படி நிலுவைத் தொகையினை செலுத்தாததால், வருவாய் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தூத்துக்குடி இணை ஆணையர் எம்.அன்புமணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நன்செய் நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7.50 கோடியாகும்.

இந்நிகழ்வின்போது திருக்கோயில் உதவி ஆணையர் கே.கோமதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post தென்காசி அருகே திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.7.50 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thirukhoil ,Tengkasi ,South Kashi ,Arulmiku ,Thirumalai ,Kumarasuwamy ,Thirukoel, Tenkasi District ,Thirukkoil ,South Kasi ,Dinakaran ,
× RELATED குற்றாலம் மெயின் அருவி மற்றும்...