×

நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: அக்கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டம்

உத்தரபிரதேசம்: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி மக்களவை தேர்தல் தனித்து களம் காண பகுஜன் சமாஜ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருவதாக கூறினார். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியாலோ, என்.டி.ஏ. கூட்டணியாலோ பகுஜன் சமாஜ் கட்சி இடம் பெறாது என்று உறுதிப்படுத்தினார்.

இரு கட்சிகளும் பட்டியலினத்தவருக்கோ, முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தலிகளிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும் என்ற மாயாவதி பஞ்சாப், அரியானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: அக்கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Bahujan Samaj Party ,Mayawati ,Uttar Pradesh ,BSP ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு நல்ல நாட்கள் வந்தது,...