×

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதில் சிறிது காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தடையின்றி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்ட மென்பொருளில் தமிழக அரசின் PICME இணையத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி தொகை வழங்கப்படவில்லை, என்றும் திட்டத்தை கிடப்பில் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கைக்கும் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார் அவ்வாறு ஊழல் எதுவும் நடைபெறவில்லை அந்த திட்டத்தில் தாமதம் இருப்பது உண்மைதான் என்பது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளாக ஒரு கர்ப்பிணிக்கு 10 மாதங்களுக்கு உள்ளக ரூ. 14,000 மொத்தம் 5 தவணைகளாக வழங்கப்படும், அதுமட்டுமின்றி ரூ. 4,000 மதிப்பிலான பரிசு பொருட்கள், கர்ப்பிணிகள் சப்படக்கூடிய பேரிச்சம்பழம், முந்திரி, ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு பரிசு பெட்டகம் ரூ. 4,000 மதிப்பிலான பெட்டகமும் மற்றும் ரூ. 14,000 மொத்தம் 5 தவணைகளாக பிரித்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த திட்டம் கிடப்பில் இருக்கிறது என்பது தான் குற்றச்சாட்டு, இந்த திட்டத்தை சரிசெய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றினை அமைத்திருக்கிறோம் அவர்களுக்கு மூன்று முறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் 2022ம் ஆண்டு மே மாதத்தில் 13ம் தேதி, அக்டோபர் மாதத்தில் 12 மாதத்திலும் மூன்று முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன தமிழ்நாடு தேசிய திட்ட குழுமத்தின் சார்பாக தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் மையத்தின் சென்னை குழு இந்த ஆண்டு 2023 ஜனவரி மாதத்திலும் மே மாதத்திலும் டெல்லியில் ஆய்வு கூடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர், இந்த சூழலை பற்றி தெரிவித்தோம் வருகின்ற காலங்களில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister of Medicine Maoist ,Tamil ,Nadu ,Bajaka ,Anamalai ,Chennai ,Tamil Nadu ,Bajha ,Annamalai ,Minister of Medicine Ma ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...