×

ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, ஜூலை 19: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சஞ்சீவ்ராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 70 வயது அடைந்த ஓய்வூதியர் அனைவருக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தாளர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850 வழங்கிட வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும். அதற்கு செலவழித்த தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட பொருளாளர் பெரியய்யா விளக்கவுரை நிகழ்த்தினார். ஊட்டி வட்டாரத்தை சேர்ந்த ஆசரா, குன்னூர் வட்டாரத்தை சேர்ந்த ராமன்குட்டி, கூடலூர் வட்டாரத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ், கோத்தகிரி வட்டாரத்தை சேர்ந்த தயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் குமார் நன்றி கூறினார். இதில், 50 பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

The post ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pensioners Association ,Ooty ,All Sector Pensioners Association ,District Collector's Office ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...