×

வேதாரண்யம் அருகே தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

 

வேதாரண்யம்,ஜூலை 19: வேதாரண்யம் அருகே அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு வரைபடம் வரைந்து அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்பு மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சீருடை வழங்கப்பட்டது.

The post வேதாரண்யம் அருகே தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day ,Vedaranyam ,Undergadu Sundaresa Vilas Government ,Aided Primary ,School ,
× RELATED நடுக்கடலில் படகு கவிழ்ந்தது 11 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்