×

கூட்டுறவுசங்கங்கள் மூலம் குறுவை பயிர்கடன் இலக்கு ரூ.40கோடி

 

நாகப்பட்டினம்,ஜூலை19: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் குறுவை பயிர்கடன் வழங்க இந்த ஆண்டு ரூ.40 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கடன் தேவைப்படும் விவசாயிகள் உடன் சிட்டா அடங்கல் நகலுடன் தாங்கள் உறுப்பினராக உள்ள சங்கத்தில் கடன் மனு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர்க்கடன் தனிநபர் ரூ.1.60 லட்சம் வரையில் நபர் ஜாமீன் பெயரில் அதிகபட்சமாக கடன்பெறலாம். நகை அடமானத்தின் பேரில் ரூ.3.00லட்சம் வரை கடன் பெறலாம். ஏக்கர் ஒன்றுக்கு பயிர்கடன் ரொக்கமாக ரூ.28550ம் பொருள் பகுதியாக ரூ.7550ம் ஆக மொத்தம் ரூ.36,100 வழங்கப்படும். மேலும் பயிர்சாகுபடிக்கு தேவையான உரங்கள் குறுவை தொகுப்புக்கு தேவையான உரங்கள் அனைத்து தொடக்க ேவளாண்ைம கூட்டுறவு கடன்சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே குறுவை சாகுபடி செய்யும் தகுதி உடைய அனைத்து விவசாய உறுப்பினர்களுக்கும் கூட்டுறவு துறை மூலம் பயிர்கடன் வழங்கப்படும்.

மேலும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைபதிவாளரை 7338721201 என்ற எண்ணிற்கும், நாகப்பட்டினம் சரக துணைபதிவாளரை 9087946937 என்ற எண்ணிற்கும், துணைபதிவாளர்/ பணியாளர் அலுவலரை 9080015003 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவுசங்கங்கள் மூலம் குறுவை பயிர்கடன் இலக்கு ரூ.40கோடி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை