×

மயிலாப்பூர் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தீபன் கைது

சென்னை: மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக இருந்த டொக்கன் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி தீபனை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா(46). கூலிப்படை தலைவன் சிடி மணி மற்றும் வடசென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது கொலை, கொலை முயற்சி என 28க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ரவுடி டொக்கன் ராஜா கடந்த 2003ம் ஆண்டு பல்லக்குமா நகரை சேர்ந்த கறிக்கடை நடத்தி வந்த கதிரவன்(எ)கதிராவை கொலை செய்தார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் கதிரவன் சகோதரன் தீபன் பல முறை டொக்கன் ராஜாவை கொலை செய்ய முயன்று தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்த தனது சகோதரன் கதிரவன் மகன் நரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கடந்த 9ம் தேதி ரவுடி டொக்கன் ராஜாவை வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் மயிலாப்பூர் போலீசார் கதிரவன் மகன் நரேஷ்குமார் (23), ராஜேஷ் (22), சபரிநாத் (21), மனோஜ்குமார்(21), அஸ்வின் (25), கார்த்திகேயன் (25) என 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, பைக், 8 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கதிரவன் சகோதரன் தீபன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், மயிலாப்பூர் போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் தீபனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

The post மயிலாப்பூர் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தீபன் கைது appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Dokan Raja ,Deepan ,Chennai ,
× RELATED சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின்...