×

பாஜ மாஜி எம்.பியின் ஆபாச வீடியோ குறித்து உயர்மட்ட விசாரணை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்நவிஸ் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா பாஜ துணை தலைவர் கிரித் சோமையா. மாஜி எம்.பியான இவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் வைரலானது. இது தொடர்பாக பல புகார்களும் இருப்பதாகவும் அந்த வீடியோக்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதனிடையே தான் எந்த பெண்ணுடனும் வரம்பு மீறி நடந்ததில்லை என்று கிரித் சோமையா தெரிவித்தார்.

இது பற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்நவிசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தை பெற்றுக் கொண்ட பட்நவிஸ் உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் பட்நவிஸ் தெரிவித்தார்.

The post பாஜ மாஜி எம்.பியின் ஆபாச வீடியோ குறித்து உயர்மட்ட விசாரணை: மகாராஷ்டிரா துணை முதல்வர் பட்நவிஸ் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Baj ,Maharashtra ,Deputy Chief Minister ,Bhadnavis ,MUMBAI ,BJP ,Vice President ,Girit Somaiya ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தேர்தல் அறிக்கை வெளியிட மறுப்பு;...