×

பாக். டிரோன் வீசிய 2 கிலோ ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்: பஞ்சாபின் தரன் தரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று நுழைந்தது. சத்தத்தை கேட்டு உஷாரான வீரர்கள் அதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் டிரோனை கண்டறிய முடியவில்லை .இதனை தொடர்ந்து நேற்று காலை அந்த பகுதியில் வீரர்கள் தேடியபோது சுமார் 2 கிலோ எடையுள்ள ஹெராயின் பாக்கெட்டுக்கள் டிரோன் மூலமாக வீசப்பட்டு கிடந்தது. அற்றை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

The post பாக். டிரோன் வீசிய 2 கிலோ ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Pakistan ,Taran Taran district ,Punjab ,Dinakaran ,
× RELATED ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க்...