×

60%க்கும் மேல் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்: ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: 2023-2024ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் நடந்த மானிய கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 500 பயனாளிகளுக்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்’’ என்றார். அதன்படி இத்திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.17.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் அறிவிப்பை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் தொகை ரூ.4.50 கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசினை கோரியுள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக சுமார் 500 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.அதன்படி இந்த திட்டத்திற்காக, போலிேயாவால் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்கள். விபத்து மற்றும் இதர காரணங்களால் 60% க்கும் மேல் கால் துண்டிக்கப்பட்டவர்கள். இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தவிர ஏனைய இரு சக்கர வாகனங்கள் இயக்க இயலாத நிலையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள். கைகள் நல்ல நிலையில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட, 65 வயது வரையுள்ள ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமையிலும், அடுத்தபடியாக பணிபுரிபவர்கள், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

The post 60%க்கும் மேல் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்: ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Anandakumar ,Assembly Assembly ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...