×

காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் முகமூடி கொள்ளையர்கள் தொல்லை அதிகரிப்பு: அமைச்சரிடம், நரிக்குறவர்கள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை வாகிரியார் நகரில் தினசரி முகமூடி கொள்ளையர்கள் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், நரிக்குறவர்கள் புகார் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், நரிக்குறவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் வாகிரியார் நகரில் அரசு கட்டித்தந்த பசுமை வீட்டில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் தினசரி 3 பேர் முகமூடி அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது, இருசக்கர வாகனங்களை திருடிச்செல்வது, அடியாட்களை விட்டு இரவில் குடியிருப்புகளுக்குள் கல் எறிவது போன்ற தொல்லைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் மாகரல் காவல் நிலையத்தில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், முகமூடி அணிந்து வரும் 3 பேரும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு உறவினராக இருப்பதாகவும், பழங்குடியின மக்களாகிய நாங்கள் நிம்மதியாக வாழ, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என விக்ரம், யுதா தலைமையில் பழங்குடியின மக்கள், அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

The post காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் முகமூடி கொள்ளையர்கள் தொல்லை அதிகரிப்பு: அமைச்சரிடம், நரிக்குறவர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Kuruvimalai ,Kanchipuram ,Foxes ,minister ,Vagiriyar ,Thamo Anparasan ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...