×

ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட மூசிவாக்கம் கிராமத்தில் பொது பயன்பாட்டிற்கென சர்வே எண் 149/7, 149/8 ஆகியவற்றில் 20செண்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் பொது குடிதண்ணீர் கிணறு, ரேடியோ ரூம் என கிராம கணக்கில் உள்ளது. இந்த இடத்தின் அருகில் உள்ள சில தனி நபர்களால் தொடர்ந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், குடிதண்ணீர் எடுக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மூசிவாக்கம் கிளை கோரிக்கை விடுத்துள்ளது. இதனைதொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மூசிவாக்கம் கிளை சார்பில், வையாவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கிளை செயலாளர் மோகன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை நிலம் அளவீடு செய்து கிராம நிர்வாகத்திடம் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

The post ஆக்கிரமிப்பை மீட்கக்கோரி காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Moosivakkam ,Maduraandakam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...