×

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் ரூ.1204.87 கோடி மதிப்பில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் ரூ.1204.87 கோடி மதிப்பில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளனர். டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,204.87 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் அளித்துள்ளனர். ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர், பேரக்ஸ் சாலை, கெல்லிஸ் மெட்ரோ சுரங்கப் பாதைகளில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயனாவரம், புரசைவாக்கம் மெட்ரோ சுரங்கப் பாதைகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் ரூ.1204.87 கோடி மதிப்பில் ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Railway 3 ,Chennai ,Tata ,
× RELATED டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!!