எம்ஜி மோட்டார் நிறுவனம், இந்தியாவின் முதலாவது எலக்ட்ரிக் இன்டர்நெட் எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. இசட்எஸ் எஸ்யுவியின் மேம்படுத்தப்பட்ட மாடலான இதில், தானியங்கி அடாஸ் லெவல் -2 தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. 17 அடாஸ் அம்சங்கள் இதில் உள்ளன. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.27.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 50.3 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 461 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், ஐ-ஸ்மார்ட் என்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
கீலெஸ் என்ட்ரி , 17.78 செ.மீ முழுமையான டிஜிட்டல் கிளஸ்டர், 25.7 செமீ எச்டி தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், டயரில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, ஹில் டிசண்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள 8 அடுக்கு ஹேர்பின் மோட்டார், அதிகபட்சமாக 176 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 8.5 நொடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் மோட்கள் உள்ளன.
The post எம்ஜி எலக்ட்ரிக் கார் appeared first on Dinakaran.