×

468 மதுபாட்டில்கள் கொள்ளை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், ராமசாமி (47) மேற்பார்வையாளராகவும், பொன்னுசாமி (48), முருகேசன், முனியப்பன் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கடையை திறந்தபோது, கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை போட்ட மர்ம நபர்கள், மதுபானங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 11 பெட்டிகளில் இருந்த 444 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் 24 பீர் பாட்டில்கள் என 468 மது பாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post 468 மதுபாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : honeykotta ,krishnagiri district ,tasmak ,honeykok ,Ramasamy ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...