×

பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் சந்திப்பு; இக்கட்டான தருணத்தில் துணை நிற்போம் என உறுதி..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். நேற்று அதிகாலை 7 மணிக்கு அமலாக்கத்துறை சார்பாக அமைச்சர் பொன்முடி வீடுகளில் ரெய்டு தொடங்கியது. அதிகாலை 7 மணிக்கு அவர் சென்னை வீட்டில் முதலில் ரெய்டு தொடங்கியது. அதை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடி நேற்று அதிகாலையில் இருந்து அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் மிகவும் சோர்வான முகத்துடன் விசாரணைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அமைச்சர்கள் கே.என்.நேரு, சி.வி.கணேசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோரும் பொன்முடியுடன் சந்தித்து பேசினர். அமலாக்கத்துறையின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நேரில் ஆலோசனை வழங்கினார். இக்கட்டான தருணத்தில் நாங்கள் துணை நிற்போம் என்று பொன்முடிக்கு அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

The post பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் சந்திப்பு; இக்கட்டான தருணத்தில் துணை நிற்போம் என உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Ministers ,Duraimurugan ,I. Periyasamy ,Ponmudi ,Chennai ,I.Periyaswamy ,Raghupathi ,Saidapettai House ,Dinakaran ,
× RELATED சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து 5...