×

12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் அன்னப்பறவை கணக்கெடுப்பு பணி… மன்னர் சார்லஸுக்கு மரியாதை செலுத்திய பின் துவக்கம்!!

லண்டன் : லண்டன் தேம்ஸ் ஆற்றில் பாரம்பரிய ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னப்பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. லண்டன் மாநகரை வசீகரிக்கும் தேம்ஸ் ஆற்றில் மிதக்கும் வெண்ணிற ஓவியமாய் உள்ள அன்னப்பறவைகள் ஆண்டு தோறும் கணக்கிடப்படுகின்றன. அதன்படி 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் ஸ்வான் அப்பிங் எனப்படும் அன்னம் பிடித்து எண்ணும் நிகழ்வு நேற்று தொடங்கியது. பாரம்பரிய முறைப்படி சிவப்பு கோட்டும் அன்ன பறவையின் இறகு செதுக்கப்பட்ட வெண்ணிற தொப்பி அணிந்த அன்னம் கணக்கெடுப்பாளர் தன் குழுவினருடன் படகு துறையில் குழுமினார்.

இங்கிலாந்து சட்டப்படி திறந்தவெளி நீர்நிலைகளில் உரிமையாளர் குறியீடு இல்லாத எல்லா அன்னங்களும் அரியணைக்கு சொந்தமானது என சட்டம் இருப்பதால், இங்கிலாந்து அரசர் சார்ல்ஸுக்கு மரியாதை செலுத்திய அவர்கள், துடுக்கால் இயக்கப்படும் சிறிய படகில் பயணித்து அன்ன பறவைகளை கணக்கெடுத்தனர். 5 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் ஆற்றில் 127 கிமீ பயணம் செய்து அன்னப்பறவைகளை கணக்கெடுக்க உள்ளனர். அரச குடும்பங்களுக்கு விருந்துகளுக்கு தேவையான அன்ன பறவை கிடைப்பது தடைபடாது இருக்கவே இந்த ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது அன்னங்கள் உண்ணப்படுவதில்லை என்றாலும் பாரமபரிய அன்னம் எண்ணும் நிகழ்வு நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது.

The post 12ம் நூற்றாண்டு முதல் பின்பற்றப்படும் அன்னப்பறவை கணக்கெடுப்பு பணி… மன்னர் சார்லஸுக்கு மரியாதை செலுத்திய பின் துவக்கம்!! appeared first on Dinakaran.

Tags : King Charles ,London ,Swan Upping ,River Thames ,Swan ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை