×

வெள்ளகிணர் பகுதிக்கு பஸ் வசதி கேட்டு பெண்கள் அமைச்சரிடம் கோரிக்கை

 

பெ.நா.பாளையம். ஜூலை 18: கோவை வந்த அமைச்சர் முத்துசாமியிடம் பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணர் பகுதி 2-ல் மாநகராட்சி வார்டு எண். 1, 2,26,27 மற்றும் 28-ல் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 186.34 லட்சத்தில் தார்சாலை புதுபிக்கும் பணி தொடங்கப்பட்டது. பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி பணியை தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அவுசிங் யூனிட் பகுதி 2-க்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த 4 டவுன் பஸ்களில் தற்போது இரண்டுதான் வருகிறது. அதுவும் முக்கிய நேரங்களில் வருவதில்லை.

பள்ளி மாணவர்கள் வசதிக்காக டவுன்பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி கூறினார். இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் பிரதாப், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜசேகர், சித்ரா தங்கவேலு, அம்பிகா தனபால், சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, நிர்வாகிகள் வெ.நா.பழனியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழக செயலாளர் சிவா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், பகுதி கழக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், இராக்கிமுத்து, அருண், சம்பத், தன்ராஜ் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், ரம்யா, வட்டக் கழக செயலாளர்கள் ராஜசேகரன், சண்முகம், சோமசுந்தரம், சுந்தரம் மற்றும் வட்டக் கழக பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post வெள்ளகிணர் பகுதிக்கு பஸ் வசதி கேட்டு பெண்கள் அமைச்சரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellakinar ,B. Na. ,Palayam ,minister ,Muthuswamy ,Coimbatore ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் யானைகள் – மக்கள் அச்சம்