×

எஸ்ஆர்எம் கல்லூரி தலைவர் பிறந்தநாள் விழா

 

மதுரை, ஜூலை 18: எஸ்ஆர்எம் இன்ஜினியரிங் கல்லூரியில், கல்லூரி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா (நெடுங்குளம் ரோடு) பொட்டபாளையத்தில் உள்ள எஸ்ஆர்எம் எம்சிஇடி கல்லூரியில், அவற்றின் தலைவர் டாக்டர் பா.ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரித் தலைவரின் சாதனைகள் மற்றும் அவரது வெற்றிப் பயணத்தை கல்லூரி முதல்வர் சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.

The post எஸ்ஆர்எம் கல்லூரி தலைவர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : SRM College President Birthday Festival ,Madurai ,SRM Engineering College ,Sivagangai District ,Tirupuvanam ,SRM College President's Birthday Festival ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை