×

சின்ன காஞ்சிபுரத்தில் ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: எம்பி, எம்எல்ஏக்கள் வழங்கினர்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் பகுதியில் ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை எம்பி, எம்எல்ஏக்கள் வழங்கினர். சின்ன காஞ்சிபுரம் பகுதி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட பிரதிநிதியும், பணிக்குழு தலைவருமான சுரேஷ் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் மெஷின், புடவைகள், மாணவர்களுக்கு கிரிக்கெட் மட்டை ஆகியவற்றை வழங்கினர்.

மேலும், சின்ன காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்து மாத்திரைகள் வைப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகர அவை தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்துச்செல்வன், சிகாமணி, இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சசிகலா கணேஷ், பகுதிச் செயலாளர்கள் சிவா, தனசேகரன், மோகன், முரளி, சங்கர், புவனகிரி, பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

The post சின்ன காஞ்சிபுரத்தில் ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: எம்பி, எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Sindna Kanchepuram ,Kanchipuram ,Sindina Kanzipuram ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...