×

கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி, ஜூலை 18: கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மறைந்த கோவில்பட்டி பயணியர் விடுதியில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். வழக்கறிஞர் அய்யலுசாமி, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் வழக்கறிஞர் கணேசமூர்த்தி, கோவில்பட்டி நகர தலைவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊடகப்பிரிவு அமைப்பாளர் பரம்பக்கோட்டை ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட இயற்கை விவசாய அணி தலைவர் கருப்பசாமி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதி, தெலுங்கு பிரசார சபா அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜெயாவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti RTO ,Kovilpatti ,National Farmers' Union ,Kotaksiyar ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் காவலர்கள்...