×

ரூ.4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

 

மல்லசமுத்திரம், ஜூலை 18: மல்லசமுத்திரம் அடுத்த மொரங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பாலமேடு உபகிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுரபி மற்றும் பிடி ரகம் என 160 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், ஈரோடு, கரூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6,350 முதல் ரூ.7,010 வரையிலும், பி.டி. ரகம் குவிண்டால் ரூ.6,150 முதல் ரூ.6,835 வரையிலும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 160 மூட்டை பருத்தி ரூ.4 லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் 24ம்தேதி நடைபெறும் என சங்கத்தின் மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

ராசிபுரம்:ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், அக்கரைபட்டி விற்பனை மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. வெண்ணந்தூர், நடுப்பட்டி, ஓ.செளதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 197 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் பருத்தி குவிண்டால் ரூ.6,400 முதல் ரூ.7,025 வரை விற்பனையானது. ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.4 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Morangam Elementary Agriculture Cooperative Credit Union ,Palamedu ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்