×

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘‘அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது மாயமான அவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன. இந்நிலையில் நியாயம் கிடைக்கும் என்ற இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தியளிக்கிறது என்றார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக இதுவரை ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தொடரலாம். விசாரணையை முடித்து கூடுமானவரை விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். வழக்கு தொடர்பாக இதுவரை 1,040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichy Ramjayam ,iCort ,Special Intelligence Committee ,Chennai ,Minister ,K. N.N. Nehru ,Ramjayam ,Trichy Ramazeam ,iCourt ,Special Investigation Committee ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; சிறப்பு...