×

2030க்குள் 35 லட்சம் எலக்ட்ரிக் கார்கள்: டொயோட்டா நிறுவனம் திட்டம்

டொயோட்டா நிறுவனம் ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் கார்களை பொது இடங்களில் சார்ஜிங் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவு காரணமாகவும், நீண்ட தூர பயணத்துக்கு அவை ஏற்றதாக இல்லை என்பதும் இதற்கு காரணம் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், படிப்படியாக ஹைபிரிட் கார்கள் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, ஹைபிரிட் கார்களை போலவே நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் கார்களான இவை 2026ல் சந்தைப்படுத்தப்படலாம். 2030ம் ஆண்டுக்குள் 35 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என டொயோட்டா தரப்பில் கூறப்படுகிறது.

The post 2030க்குள் 35 லட்சம் எலக்ட்ரிக் கார்கள்: டொயோட்டா நிறுவனம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Toyota ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...