×

கேரள மாநிலம் திருச்சூர் சிவன் கோவிலில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்கும் ஊட்டு விழா விமரிசை..!!

கேரளா: கேரள மாநிலம் திருச்சூர் சிவன் கோவிலில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்கும் ஊட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. கேரளாவில் யானைகளை கோவில்களிலும், தனியாரும் வளர்த்து பராமரித்து வருகின்றனர். தற்போது கேரளா பகுதிகளில் மழை மற்றும் குளிர்காலம் துவங்கி இருக்கக்கூடிய காரணத்தினால் இந்த யானைகளுக்கு இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.

இதனால் யானைகளின் மனநிலை சீராக இருக்காது என்ற காரணத்தினால் இந்த யானைகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், ஓய்வு அளிக்கவும் வேண்டி யானை ஊட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. திருச்சூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வடக்குநாதன் சிவன் கோவிலில் இந்த ஆண்டு 41வது ஆண்டாக யானை ஊட்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

திருச்சூர், பாலக்காடு,எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 65க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டது. விழாவிற்கு வந்த மக்கள் யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், அரிசி உணவு உள்ளிட்டவற்றை மருந்து கலந்து ஊட்டி மகிழ்ந்தனர்.

The post கேரள மாநிலம் திருச்சூர் சிவன் கோவிலில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்கும் ஊட்டு விழா விமரிசை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala, Thiruchur Shiva Temple ,Kerala ,Thiruchur Shiva ,Thiruchur Shiva Temple ,Kerala State ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்