×

அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக அமலாக்கத்துறையின் சோதனை தொடர்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்வி என 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Minister ,Ponmudi ,CHENNAI ,Saitappettai, Chennai ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...