×

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் 11வது முறையாக வாய்தா கேட்டது சிபிஐ..!!

 

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கேட்டுள்ளது.

குட்கா வழக்கு 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ – நீதிமன்றம் அதிருப்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கேட்டுள்ளது. ஆளுநர் ரவி தாமதத்தால் குட்கா ஊழல் வழக்கு விசாரணை முடங்கியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக 11 முறை சிபிஐ வாய்தா கேட்டதால் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியால் வாய்தா கேட்கும் சிபிஐ

ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதத்தால் சிபிஐ நீதிமன்றத்தில் வாய்தா கோரியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்தாண்டு முதல் சிபிஐ அனுமதி கோரி வருகிறது.

ஆளுநர் ரவி அனுமதி தராததால் குட்கா வழக்கில் தாமதம்

ஆளுநர் ரவி அனுமதி தராததால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநருக்கு கடந்த மாதம் 5ம் தேதி கடிதம் எழுதிய பிறகும் ஆளுநர் ரவி அனுமதி தர மறுத்து வருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை அனுமதித்ததாக குற்றசாட்டு எழுந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அனுப்பிய கடிதத்துக்கு 2022 ஜூலை மாதமே தமிழ்நாடு அரசு இசைவு தந்துள்ளது.

குட்கா வழக்கு- ஆளுநர் அனுமதிக்காக 11 மாதங்கள் காத்திருப்பு

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குட்கா வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநரின் இசைவுக்காக 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது.

11 மாதங்களாக கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி

தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி 11 மாதங்களாகியும் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கவில்லை.

அமைச்சர் கடிதம் எழுதியும் ஆளுநர் இதுவரை அனுமதி தரவில்லை

இதனிடையே அண்மையில் ஆளுநருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். குட்கா முறைகேடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக கூட்டணி கட்சி என்பதால் ஆளுநர் தாமதப்படுத்துகிறார்

பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி தரவில்லை என வழக்கறிஞர் தரப்பில் குற்றசாட்டு வைக்கப்பட்டது. ஆளுநரின் தாமதத்தால் குட்கா வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என சட்ட அமைச்சர் ரகுபதி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குட்கா வழக்கு – ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைப்பு

இந்நிலையில் குட்கா வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குட்கா வழக்கின் பின்னணி:

அதிமுக ஆட்சியில் சென்னை செங்குன்றத்தில் குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. குட்கா வியாபாரிகளிடம் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குட்கா வியாபாரிகளின் டைரியில் தகவல் தெரியவந்துள்ளது. குட்கா வியாபாரிகள் எழுதி வைத்திருந்த டைரி அடிப்படையில் அப்போதைய அமைச்சர்கள், காவல் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்காவை விற்க 2014 முதல் 2016 வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்ததாக குற்றசாட்டு வைக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகியும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் 11வது முறையாக வாய்தா கேட்டது சிபிஐ..!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Vaydha ,Gudka ,Minister ,Vijayabascar ,Chennai ,Kudka ,Vijayapaskar ,Vijayapascar ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...