×

அமலாக்கத்துறையை தொடர்ச்சியாக தன் கைப்பாவையாக மாற்றி இருக்கும் பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி ஆட்சியாளர்களை பணிய வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறைமூலமாக நெருக்கடி தர பா.ஜ.க. முயற்சி செய்கிறது. அமலாக்கத் துறையை தொடர்ச்சியாக தன் கைப்பாவையாக மாற்றி இருக்கும் பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் நடைபெறும் தினத்தில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் பங்காற்றுவதும் பாஜகவை நிலைகுலைய வைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

The post அமலாக்கத்துறையை தொடர்ச்சியாக தன் கைப்பாவையாக மாற்றி இருக்கும் பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Humanitarian People's Party ,Jawahirullah ,Minister ,Ponmudi ,Bajaka ,Jawahirilla ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...