×

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை!: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது.. கே.எஸ்.அழகிரி கண்டனம்..!!

சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன; என்றாவது அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடாத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பினார். தமிழ் மண்ணில்தான் பாஜக தோல்வியடையும். அமலாக்கத்துறை சோதனையால் மக்களிடையே எதிர்கட்சியினருக்கு செல்வாக்கு அதிகமாகும்.

பாஜகவின் ஒரு அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை செயல்படுவதாக மக்கள் கருதுகிறார்கள். பாஜகவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை; நேருக்கு நேர் எதிர்கொள்ள பாஜகவுக்கு திராணி இல்லை என்று கடுமையாக தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டருகே திமுக வழக்கறிஞர் அணியின் 25 பேர் திரண்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

The post அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை!: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அடிமைப்படுத்தலாம் என ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது.. கே.எஸ்.அழகிரி கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,BJP government ,Enforcement Department ,K.K. ,S.S. ,Chennai ,Congress party ,Tamil Nadu State Congress ,Ponmudi Household ,K.K. S.S. ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...