×

அரியலூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

 

அரியலூர்,ஜூலை 17: அரியலூர் மாவட்ட மின்னணு இயந்திரம் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுளிப்பதை உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவற்றிற்கான முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பு அலுவலர் தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிக்காக, ஓட்டுப்போடும் இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்க்கும் பணியானது ஜூலை 4 அன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், உரிய பாதுகாப்போடு, அரியலூர் மாவட்ட மின்னணு இயந்திரம் சேமிப்பு கிடங்கில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணியின் போது, அரியலூர் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்ட 1440 ஓட்டுப்போடும் இயந்திரம், 859 கட்டுப்பாட்டு இயந்திரம், 926 ஓட்டுளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களுர் பாரத் மின்னணு லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று வரை 914 ஓட்டுப்போடும் இயந்திரம், 832 கட்டுப்பாட்டு இயந்திரம், 812 ஓட்டுளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் 19 ஓட்டுப்போடும் இயந்திரம், 139 கட்டுப்பாட்டு இயந்திரம், 42 ஓட்டளிப்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் இயங்கா நிலையில் தனியாக வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, முன்னிலையில், தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு இயந்திர கண்காணிப்பு அலுவலர் தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் (தேர்தல்) வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அரியலூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Machine ,Ariyalur ,Ariyalur District Electronic Machinery ,Storage Warehouse ,Dinakaran ,
× RELATED நெல் வயலில் பாசி கட்டுப்பாடு...