×

மேத்யூஸ் 64, தனஞ்ஜெயா 94* இலங்கை 242/6

காலே: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். மதுஷ்கா 4, குசால் மெண்டிஸ் 12, கருணரத்னே 29 ரன் எடுத்து ஷாகீன் அப்ரிடி வேகத்தில் வெளியேற, சண்டிமால் 1 ரன் எடுத்து நசீம் ஷா பந்துவீச்சில் பாபர் ஆஸம் வசம் பிடிபட்டார். இலங்கை அணி 15.2 ஓவரில் 54 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மேத்யூஸ் – தனஞ்ஜெயா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்தனர்.

மேத்யூஸ் 64 ரன் (109 பந்து, 9 பவுண்டரி) விளாசி அப்ரார் அகமது சுழலில் விக்கெட் கீப்பர் சர்பராஸ் வசம் பிடிபட்டார். அடுத்து தனஞ்ஜெயா – சமரவிக்ரமா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது. சமரவிக்ரமா 36 ரன் எடுத்து ஆஹா சல்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவ்வப்போது மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் குவித்துள்ளது. தனஞ்ஜெயா 94 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post மேத்யூஸ் 64, தனஞ்ஜெயா 94* இலங்கை 242/6 appeared first on Dinakaran.

Tags : Matthews ,Tanjaya ,Sri Lanka ,Pakistan ,Dinakaran ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது