×

திருவொற்றியூரில் பரபரப்பு; பழைய வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் காயம்: கட்டில், பீரோ, வாஷிங்மிஷின் சேதம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பழைய வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் காயமடைந்தார். பால்கனி இடிந்து பக்கத்து வீட்டின் ஓடு வீடு மீது விழுந்ததால் அங்கிருந்த கட்டில், பீரோ, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் வடக்கு மாடவீதி செட்டி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிர்மலா (50). இந்த வீடு மிகவும் பழமையானது. இதனால் பல இடங்களில் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை வீட்டு மாடியில் உள்ள பால்கனி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து வெங்கடேசன் என்பவரின் ஓடு வீடு விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்கள் சேதமடைந்தன.

வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.இடிந்து விழுந்த பால்கனியின் ஒரு பகுதி தெருவில் சிதறியதால் விளையாடிக்கொண்டிருந்த நவீன் கிஷோர் (3) என்ற சிறுவன் தலையில் கல்பட்டு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவொற்றியூரில் பரபரப்பு; பழைய வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் காயம்: கட்டில், பீரோ, வாஷிங்மிஷின் சேதம் appeared first on Dinakaran.

Tags : Stir ,Thiruvotteur ,Tiruvottur ,Thiruvottur ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு