×

பேஸ்புக் நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ சமூக வலைதளத்தை தொடங்கிய நிலையில் விளம்பர வருவாயில் 50 சதவீதம் சரிவு: ட்விட்டரின் எலான் மஸ்க் தகவல்

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வருவாயில் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய முயன்று வருகிறோம்’ என்று கூறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்று சமூக வலைதளத்தை தொடங்கிய நிலையில், எலான் மஸ்கின் இந்த பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post பேஸ்புக் நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ சமூக வலைதளத்தை தொடங்கிய நிலையில் விளம்பர வருவாயில் 50 சதவீதம் சரிவு: ட்விட்டரின் எலான் மஸ்க் தகவல் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Twitter ,Elan Musk ,New York ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...